திறக்கப்பட்டது நூலகங்கள்- மகிழ்ச்சி அடைந்த வாசகர்கள்!

0

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.

இதனால் நூலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

இவ்வாறு மூடப்பட்ட நூலகங்கள் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின் நெறிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு
தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூரில் பார்க் ரோட்டில் உள்ள மாவட்ட மைய நூலகம், குமார் கிளை நூலகம் என்பன இன்று காலை 9 மணி முதல் திறக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நகராட்சி, ஊராட்சிகளில் உள்ள கிராமப்புற நூலகங்களும் இன்று முதல் செயல்பட ஆரம்பித்துள்ளன.

இதனால் வாசகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறித்த நூலகர்கள் மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது, ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்கள் புத்தகங்களை எடுத்துக் கொள்ளலாம், அத்துடன் செய்திதாள்,புத்தகம் அமர்ந்து படிக்க அனுமதிப்பது குறித்து இதுவரையில் எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் வாரத்தின் வெள்ளிக்கிழமை தவிர ஏனைய ஆறு நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நூலகங்கள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply