அதிபர்,ஆசிரியர்களின் வேதனை பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

0

அதிபர், ஆசிரியர்களின் வேதனை பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு செயற்பாடானது 16 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இதற்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று அலரி மாளிகையில் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வேதனை பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

மேலும் நேற்றைய தினம் இடம்பெற்ற இணையவழி அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இவர்களின் பிரச்சனை தொடர்பில் கலந்துரையாடி அடுத்த ஆண்டு முதல் புதிய முறைமை ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளும் மேலதிக அமைச்சர்கள் சிலரும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply