அம்பாறை – கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இவ்வாறு உயிரிழந்தவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்முனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



