டெல்டா தொற்று தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய தகவல்!

0

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் இருப்பார்கள் என விசேட வைத்தியர் ஹேமந்த் ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் இவர் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இந்த டெல்டா திரிபு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் குறித்த தொற்று முதன்மையான தொற்றாக மாறக்கூடிய சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தற்போது நாட்டில் நிலவும் அச்சுறுத்தலான நிலையினைக் கருத்திற்கொண்டு உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply