கட்டப்பாடு நீக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய நடை முறைமைகள் தொடர்பாக மீள் பரிசீலனை செய்வதற்கு அவதானம்.

0

நாடு முழுவதும் தற்போது கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நடமாட க் கட்டப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடமாட க் கட்டப்பாடு நீக்கப்படும் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடை முறைமைகள் தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தற்போது பரவிவரும் டெல்டா திரிபானது அடுத்து வரும் மாதங்களில் நாட்டின் பிரதான பைதஸ் திரிபாக மாற்றமடையக் கூடிய அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் பொது மக்கள் அனைவரும் ஒன்று கூடும் எண்ணிக்கை ஆகக் குறைந்தது 50 க்கும் 60 க்கும் இடையில் குறைக்க வேண்டும்.

மேலும் அவ்வாறு இல்லையெனின் பொருத்தமான வகையில் தற்போது காணப்படும் எண்ணிக்கையை விட குறைந்த மட்டத்தில் அந்த எண்ணிக்கை இருக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply