வடமாகாண பிரமத செயலாளர் நியமனத்தில் மாற்றம் செய்யுமாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் உறுப்பிர்கள் மற்றும் அவைத்தலைவர் உள்ளிட்டவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வடமாகாண பிரமத செயலாளராக சமன் பந்துலசேன ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஜானம் தலைமையில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஜானம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



