கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது!

0

திருகோணமலை- மூதுர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கேரளக் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உள்ளிட்டோர் போதை ஒழிப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய ஆண் ஒருவரிடம் இருந்து 16 ஆயிரம் மில்லிகிராம் கேரள கஞ்சாவும், பெண்னொருவரிடமிருந்து 1000 மில்லிகிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்படுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த நபர்கள் மூதூர் போதை ஒழிப்பு காவல்துறையினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணும், ஆணும் மூதூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply