யாழில் இடம்பெற்ற போராட்டம்.

0

யாழில்கறுப்பு யூலை நினைவு தினமான இன்று நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த போராட்டமானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் யாழ் மத்திய பேருத்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

ஈழத்தமிழர்கள் மீதான ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என குறிப்பிட்டு முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில்,

ஆயிரத்து 983 கறுப்பு யூலை தமிழினப் படுகைலையானது ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு அரங்கேற்றட்டது ,

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளையும் அத்தோடு நாடு முழுவதும் படுகொலை செய்யட்ட தமிழர்களையும் நினைவுகூருகிறோம் மற்றும்

மேலும் ஆயிரத்து 948 முதல் இன்று வரை நடைபெற்ற நடைபெறுகின்ற இன அழிப்பை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply