பிரபல வங்கியொன்றில் ஆறு ஊழியர்களுக்கு கொவிட் தொற்று!

0

பளைப்பகுதியிலுள்ள இலங்கை வங்கி கிளையில் ஆறு ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய பளை வைத்திய அதிகாரி பிரிவினை சேர்ந்த 16 பேருக்கு நேற்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் பி.சி. ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த பரிசோதனையில் 6 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுளள்து.

மேலும் ஒருவருக்கு மீள் பரிசோதனை செய்யப்படவுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை வங்கியின் பளை கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் நால்வரும் அங்கு பயிற்சியாளராக பணியாற்றும்இருவருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறித்த பகுதிக்கு பொறுப்பான சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply