படப்பிடிப்பின் போது மீண்டும் மோசமாக படுகாயமடைந்த நடிகர்!

0

தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் விஷால்.

இவரது நடிப்பில் கடைசியாக சாக்ரா என்ற திரைப்படம் வெளிவந்தது.

குறித்த படத்தை தொடர்ந்து விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் Enemy என்ற படம் தயாராகி இருக்கிறது.

அத்துடன் இந்த படம் எப்போது வெளியாகும் என தெரியவில்லை.

கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஷால் 31 வது படத்திற்காக ஹைதராபாத் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

ஏற்கனவே அந்த படப்பிடிப்பில் விஷாலுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.

தற்போது மீண்டும் படப்பிடிப்பில் அவருக்கு அதே இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நடிகர் விஷால் சிகிச்சைக்கு பிறகு நன்றாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply