சிவகார்த்திகேயன் டான் படத்தின் வெளியீடு எப்போது?

0

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கி வரும் படம் தான் டான்.

குறித்த படத்தை இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி, இயக்குகின்றார்.

அத்துடன் இந்த படத்தில் சூரி, சிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக விளங்குகின்றனர்.

மேலும் இந்த டான் படத்தின் முதல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்தி வருகின்றனர்..

அடுத்த மாதம் குறித்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து விடும் என குறிப்பிடப்படுகின்றது.

இதனை அடுத்து பின்னணி பணிகளை வேகமாக முடித்து படத்தை வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியீடு செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply