சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்த ஒரு தொகை மஞ்சளுடன் மூவர் கைது செயப்படுள்ளனர்.
இதற்கமைய குறித்த நபர்கள் களனி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேக நபர்களிடமிருந்து 800 கிலோ கிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதனை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பாரவூர்தி ஒன்றும் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் வத்தளை மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



