இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று உறுதி!

0

யாழ் பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 14 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 7 வர்த்தகர்களுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

அத்துடன் 40 பேரிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 7 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் வங்கி முகாமையாளர், வங்கி ஊழியர் ஒருவர், நகர சபை ஊழியர்கள் இருவர் மற்றும் பொதுமக்கள் மூவர் அடங்குகின்றனர்.

பருத்தித்துறை நகர் நேற்றிரவு முதல. முடக்கப்பட்டு வங்கிகள் மட்டும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply