பயண கட்டுபாடு விதிக்கப்படாத நாடுகளிலிருந்து கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் பெற்றுக்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு இலங்கையில் மேற்கொள்ளப்படும் பி.சி. ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்படவில்லை எனின் அவர்களுக்கு ஏழு நாட்களின் பின்னர் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த செயற்பாடானது நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



