இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி ஆசிரியரினால் மேற்கொள்ளப்பட வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கின்றது.
இந்நிலையில் அவர்கள் தங்களால் முன்வைக்கப்பட கோரிக்கைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுத்தரா விடின் தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
அத்துடன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சேவை சங்கங்களின் தலைவர்களை பலவந்தமாக தனிமைப்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 14 சங்கங்கள் இணைந்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்..
மேலும் குறித்த சம்பவத்தினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



