நாட்டில் கொவிட் தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் யாழில் மேலும் ஒரு உயிரிழப்பு சம்பவம் ஒன்று பதிவாக்கியுள்ளது.
இதற்கமைய குறித்த சம்பவத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நவாலி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்தவரின் சடலம் சுகதர விதிகளுக்கமைய மின் தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



