கொழும்பில் இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தரப்பினர் கட்டாயம் தனிமைப் படுத்துவதற்காக அழைத்துச் சென்றதை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் பிரகாரம் மருதாணி தொடக்கம் புறக்கோட்டை மற்றும் காலிமுகத்திடல் வரையிலான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்படுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.



