உலகளவில் கொவிட் தொற்று தெடர்பான முழுமையான விபரம்!

0

சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது.

இதற்கமைய குறித்த வைரஸ் தொற்று அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா,ஆகியவை முதல் ஐந்து இடங்களில் காணப்படுகின்றன.

இந்நிலையில் உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 18.80 கோடியை கடந்துள்ளது.

அத்துடன் கொவிட் பாதிப்பிலிருந்து 17.19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் குறித்த வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி இதுவரையில் 40.55 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த வைரஸ் பரவியவர்களில் 1.20 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 78 ஆயிரத்து 500 க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply