மன்னார் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சௌவுத் பார்க் கடற்கரை பகுதியில் இந்திய நாட்டுப் படகு ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த படகில் பதிவு இலக்கம் மற்றும் உரிமையாளர்களின் பெயர் தொடர்பான தகவல் எதுவுமமே பொறிக்கப்பட வில்லை.
அத்துடன் குறித்த படகு சிறிய உடைவுகளுடன் கரை ஒதுங்கியயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த படகு காற்றின் வேகம் காரணமாக கரை ஒதுங்கியுள்ளதா அல்லது சட்டவிரோதமான கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



