உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்!

0

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.

இதற்கமைய அம்பாறை, கண்டி, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அவ்வாறு நுவரெலியா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply