வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட கைக் குண்டு!

0

மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியில் குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்று நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த கைக்குண்டு தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

தகவல் வழங்கப்பட்டதையடுத்து நேற்றைய தினம் குறித்த பகுதிக்கு விரைந்த காவற்துறையினர் கைவிடப்பட்ட நிலையிலுள்ள கைக்குண்டை சோதனையிட்டனர்.

பின்னர் விசேட அதிரடிப்படையினரின் வெடிபொருட்கள் அகற்றும் பிரிவினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

இந்த கைக்குண்டை நீதிமன்ற அனுமதி பெற்று வெடிக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply