வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் !

0

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணத்தினால் களனி, களுகங்கை, ஜீன் மற்றும் நில்வள கங்கை என்பவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதனால் மேற்குறிப்பிடப்பட்ட நதிகளை அண்டிய பகுதிகளிலுள்ள தாழ்நில பிரதேசங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆகவே அதனை அயண்டிய பகுதிகளில் வாழும் பொது மக்கள் குறித்த விடயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply