24 மணிநேரமாக தீப்பற்றி எரியும் தொழிற்சாலை 40 பேர் வரையில் உயிரிழப்பு!

0

பங்களாதேசின் தலைநகர் டாக்கா அருகேயுள்ள உணவு மற்றும் குளிர்பானம் தயாரிப்பு தொழிற்சாலையில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தீயணைப்பு படைக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த தொழிற்சாலையிலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆனால் மேல் தளங்களில் உள்ள சில ஊழியர்கள் வெளியே வரமுடியாமல் அங்கே சிக்கி தவித்தனர்.

சிலர் உயிருக்கு பயந்து மாடியில் இருந்து கீழே குதித்தனர் . இதில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

24 மணி நேரத்தைக் கடந்தும் தீ கொழுந்து விட்டு எரிவதால் அந்த கட்டிடத்தில் சென்ற பணியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.

பின்னர் கயிறு மூலம் கட்டிடத்தின் மேல் தளத்தை அடைந்து மீட்பு பணியை தொடங்கினர்..

மேல்தளத்தில் இருந்து 25 பேர் வரையில் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் மூன்று நபர்கள் இருந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் மீட்புக்குழுவினர் மேல் தளத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு ஏராளமானோர் தீ காயங்களுக்குள்ளாகி இறந்து கிடந்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் வரை 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் 30 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply