நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பதவிப்பிரமாண நிகழ்வினை பகிஷ்கரித்த மூன்று உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதற்கமைய அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச ஆகியோரே இவ்வாறு சபையில் இருக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் அமைச்சர் உதய கம்மன்பில சபா மண்டபத்தில் இருந்துள்ளார் என தெரிவிக்கப்படுள்ளது.
அத்துடன் குறித்த அமைச்சர்களும் உறுப்பினரும் 20 ஆவது திருத்தத்திற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.



