உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றின் தாக்கத்தினால் மக்கள் பல்வேறு வகையான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தாக்கத்தினால் தாய்- தந்தை இருவரையும் இழந்த நிலையில் பல குழந்தைகள் காணப்படுகின்றனர்.
அந்த வகையில் தாய்- தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 93ஆக காணப்படுகின்றது.
அவ்வாறு பெற்றோரில் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் எண்ணிக்கை 3,593 ஆக உள்ளது.
மேலும் தொடர்ச்சியாக இது தொடர்பில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது.
அத்துடன் தமிழகத்தில் கொரோன காலகட்டத்தில் 100 ற்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது.
இதனோடு தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கான விழிப்புணர்வு நடைபெற்றுவருகின்றது.
மேலும் அரசின் அனுமதி பெறாத குழந்தைகள் காப்பகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



