கொவிட் தொற்றிலிருந்து மேலும் சிலர் பூரண குணமடைவு.

0

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மேலும் 1742 பேரே இவ்வாறு குணமடைந்து சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 238,131 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவரின் மொத்த எண்ணிக்கை 266,499 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றுக்குளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,628 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply