கண்டி மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் மரணங்கள்.

0

கண்டியில் ஒரே நாளில் மாத்திரம் கொவிட் தொற்றுக்குள்ளான 12 பேர் உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இதற்கமைய மத்திய மாகாணத்தில் கொவிட் தொற்றால் பாதிக்கபட்டவர் எண்ணிக்கை 28970 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் மத்திய மாகாணத்தில் நேற்றைய தினம் மாத்திரம் 118 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவற்றுள் கண்டி மாவட்டத்தை சேர்ந்த 18 பேரும் , மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 97பேரும் அடங்குகின்றனர்.

கண்டி மாவட்டத்திலேயே அதிக அளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கண்டி மாவட்டத்தில் 15525 பேர் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்றைய தினத்துடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 12 கொவிட் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் அவர்கள் அனைவரும் கண்டி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply