மணல் கொள்ளையர்களுக்கும் காவல்துறை விசேட அதிரடி படையினருக்கும் இடையில் மோதல்.

0

யாழ் அரியாலை பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு காவல்துறை விசேட அதிரடி படையினருக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த மோதல் சம்பவத்தில் நான்கு விசேட அதிரடி படையினர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மணல் கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டு காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை அரியாலை கிழக்கு பகுதிகளில் மணல் கொள்ளையில் குழு ஒன்று ஈடுபட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அங்கு மணல் கொள்ளையில் ஈடுபட்ட குழுவை அதிரடி படையினர் கைது செய்ய முற்பட்டபோது அவர்கள் மீது மணல் அள்ளுவதற்கு வைத்திருந்த உபகரணத்தால் தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தில் அதிரடி படையினர் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

அதேவேளை தப்பிச்சென்ற அவர்களில் இருவரை துரத்தி சென்று கைது செய்துள்ளனர்.

மேலும் தப்பிச் சென்ற மீனவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply