15 வயதான சிறுமி ஒருவர் இணையத்தளம் ஊடாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இவ்வாறு கைதானவர்களில் இலங்கையின் முக்கிய இருதய சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவரும் இதில் உள்ளடங்குவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக மாலைதீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.



