ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 06 ஆம் திகதி சர்வதேச முத்த தினமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.
அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் ஒரு எளிமையான செய்யற்பாடு தான் முத்தம்.
அந்தவகையில் காதலன் காதலிக்கு தரும் முத்தம், தாய் தந்தை பிள்ளைகளுக்கு தரும் முத்தம், கணவன் மனைவிக்கு தரும் முத்தம் என கிடைக்கும்.
இவ்வாறு கொடுக்கப்படும் இடத்திற்கேற்ப முத்தத்தின் அர்த்தம் மாறுபடும்.
இந்நிலையில் இந்த முத்தம் எப்போது தோன்றியது என்பது தொடர்பில் நம்மிடம் வரலாறு இல்லை ஆனாலும் கி. மு 1500 ஆண்டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப்புக்கள் உள்ளன.
இந்தியர்கலினால் கண்டு பிடிக்கப்பட்ட முத்தின் வகை 30 ஆகும், இவ்வாறு ரோமோனியர்கள் கண்டு பிடித்தது 3 வகை முத்தத்தை மாத்திரமே ஆகும்.
இந்த முத்தத்தில் பிரபலமான முத்தமாக கருதப்படுவது எஸ்கிமோ முத்தம் ஆகும் இது பனி பிரதேசங்களில் கூடுத்தலாக பயன்படுத்துவர்.
அதேபோல் வெளிநாடுகளில் கடிதம் எழுதுவோர் கடிதத்தின் முடிவில் x குறியிடுவது வழக்கம்.
மேலும் உலகிலேயே முதன் முறையாக முத்த காட்சி இடம் பெற்ற படம் ஹாலிவுடன் படம் தான் எனபதும் குறிப்பிடதக்கது.
