திருகோணமலை மாவட்டம் கிண்ணியா ஆலங்கேணி பகுதியில் நேற்றைய தினம் நபர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 72 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் 4 நபர்கள் மீன் பிடியில் ஈடுபட்ட சென்றபோது குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



