வரும் வாரங்களில் அரிசியின் விலை குறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று நெல் கொள்வனவு சபையின் உபதலைவர் துமிந்த பிரியதர்சன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சிறுபோக நெற்செய்கையில் அறுவடை செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசியின் விலை சந்தையில் குறைவடையும்மென்று பெரிதும் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரிசி விலையை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக துமிந்த பிரியதர்சன தெரிவித்துள்ளார்.



