நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது.
இதற்கமைய நாட்டில் மேலும் 34 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்நிலையில் நாட்டில் இதுவரை காலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மரணித்தவர்களின் எண்ணிக்கை 3,191 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் நாட்டில் கொவிட்
தொற்றாளர்களின் எண்ணிக்கை 262,795 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



