பெறோர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை!

0

தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலியல் துஸ்பிரயோகங்களிடமிருந்து தங்களது பிள்ளைகளை பாதுகாத்து கொள்வதற்காக பெற்றோர்கள் அனைவரும் அவதானத்துடனும் பொறுப்புடனும் செயலாற்ற வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தாய்மார்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய கல்கிசை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இணையம் ஊடாக பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இந்த கோரிக்கையை முன் வைத்து இருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 26 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் மேலும் 16 பேர் கைது செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply