ஊரகஸ் மங்ஹந்திய, தேவத்த சந்தியில் நபர் ஒருவர் துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய குறித்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.
அத்துடன் இந்த இந்த துப்பாக்கிப் பிரயோகமானது நபரின் வீட்டிற்கு அருகில் வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



