உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்ட 8 காவற்துறை அதிகாரிகள்.

0

சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர்கள் 7 பேர் உட்பட பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவருக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

இந்நிலையில் சேவை தேவையின் அடிப்படையில் குறித்த இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிரேஷ்டபிரதி காவல்துறை மா அதிபர்களான நந்தன முனசிங்க, அஜித் ரோகண, பக்தி நாயக்க, தர்மரத்ன, ஜயலத், கொடிதுவுக்கு, துமிந்த மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர் விஜய் சேன ஆகிய 8 அதிகாரிகளுக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply