இன்று நிறைவுக்கு வந்த அரச தாதியர்களின் போராட்டம்!

0

தாதியர் சங்கத்தினரால் கடந்த இரு நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த சுகயீன விடுமுறை போராட்டம் இன்று நிறைவுக்கு வந்துள்ளது.

இதற்கமைய பதவி உயர்வு மற்றும் தாதியர் கொடுப்பனவு உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வைத்தியசாலைகளின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிறைவுகாண் நான் வைத்திய சேவையாளர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமையே இதற்கான காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் ஆய்வுகூட பணிகள் மருந்தகங்கள் உள்ளிட்ட வைத்தியசாலை சேவைகள் பாதிப்படைந்துள்ளது.

அத்துடன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட 7 கோரிக்கைகளில் 5 கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி தீர்வு அளிப்பதாக நேற்று உறுதியளித்திருந்தார்.

அத்துடன் ஏனைய 2 கோரிக்கைகளுக்கும் அடுத்த பாதீட்டில் தீர்வு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply