மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் வறுமை நிலையினை கருத்திற் கொண்டு அரசு உத்தியோகத்தர்கள் சிலர் அசிங்கமான முறையில் லஞ்சம் கேட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த விடயம் சம்மந்தமான ஓடியோ பதிவொன்றும் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் மட்டக்களப்பு கிராம உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு லஞ்ச ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் உரிய உயரதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.



