விவசாயிகளுக்கு உரம் தொடர்பில் விடுக்கப்பட்ட மகிழ்ச்சியான தகவல்!

0

தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியினால் நேற்றைய தினம் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கமைய குறித்த அறிக்கையில் தற்போதைய தி.மு.க அரசின் அலட்சியத்தாலும் , அஜாக்கிரதையாலும் தற்போதைய காலத்தில் தரமான விதை நெல் மணிகள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்று நடவு பணியில் ஈடுபட்டுள்ள வேளாண் பெருமக்கள் கவலை அடைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றது.

இந்நிலையில் குறிப்பாக தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே வரகூரை சேர்ந்த விவசாயி வீரமணி தனது 9 ஏக்கர் நிலத்தில் 7 ஏக்கரில் தனியாரிடமிருந்து ஏ. டி ரக நெல் விதையை வாங்கி நாற்று தயார் செய்துள்ளதாகவும் மீதமுள்ள இரண்டு ஏக்கருக்கு செந்தலை வேளாண்மை விரிவாக்க மையத்திலிருந்து கோ -51 ரக விதை நெல்லை வாங்கி நாற்று தயார் செய்து விதைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் திமுக அரசு வழங்கிய விதை நெல்கள் முளைக்கவில்லை என்றும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதற்கமைய இவ்வாறு பாதிப்படைந்துள்ள விவசாயி வீரமணிக்கு புதிய நெல் விதையை இலவசமாக வழங்க வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வீன் அடைந்த அனைத்து விதை நாற்றுகளுக்கும் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் காலங்களில் மிகுந்த விழிப்புணர்வோடு தரமான விதை நெல்களை தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply