வெளிநாடு சென்று உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான தீர்மானமொன்று முன்னெடுக்கப்படுள்ளது.
இதற்கமைய குறித்த நபர்களுக்கு கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் சினோ பார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டமானது இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு www.army.lk/covid19 என்ற இணைய தளத்தினுள் உட் பிரவேசிக்குமாறு அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



