புரட்டாசி மாதத்தில் இதைச் செய்தால் வீட்டில் பல மடங்கு செல்வம் பெருகும்..!

0

சிவனுக்குரிய தினங்களில் மிகவும் சிறப்புக்குரியது சிவராத்திரி வழிபாடு.

தமிழ் மாதங்களில் வரும் ஒவ்வொரு சிவராத்திரியும் என்னென்ன பலன்கள் தரும் என்பதை பார்ப்போம்:

சித்திரை மாதத்தில் வரும் சிவராத்திரியில் விரதம் இருந்தால் உடல் உறுப்புகளின் குறைகள் நீங்கும். முடிவில் ருத்திர கணங்கள் வந்து சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.

வைகாசி மாதத்தில் வரும் சிவராத்திரியில் பூஜை செய்தால் உட்கொள்ளும் மருந்து உடலில் சேர்ந்து நோய் நீங்கி ஆரோக்கியம் கிட்டும்.

ஆனி மாதத்தில் வரும் சிவராத்திரியில் பூஜை செய்தால் வாழ்வில் சகல சம்பத்தும் சேரும்.

ஆடி மாதத்தில் வரும் சிவராத்திரியில் பூஜை செய்தால் அம்பிகையுடன் சேர்ந்து சிவராத்திரி பூஜை செய்த பலன் கிட்டும்.
ஆவணி மாதத்தில் வரும் சிவராத்திரியில் பூஜை செய்தால் வேதம் ஓதிய பலன் கிட்டும்.

புரட்டாசி மாதத்தில் வரும் சிவராத்திரியில் பூஜை செய்தால் செல்வம் பெருகும்.

ஐப்பசி மாத சிவராத்திரியில் பூஜை செய்தால் நாம் உணவிற்காக என்றுமே கையேந்தி நிற்கும் நிலை வராது.

கார்த்திகை மாத சிவராத்திரியில் பூஜை செய்தால் கிட்டும் பலனை விவரிக்க நூற்றாண்டுகள் போதாது. அத்தனை புண்ணியம் சேரும்.

மார்கழி மாத சிவராத்திரியில் பூஜை செய்தால் அதுவரை செய்த அனைத்து விதமான பாவங்களும் நீங்கும்.

தை மாத சிவராத்திரியில் பூஜை செய்தால் நெல் முதலான தானியங்கள் நன்கு விளையும். தானப் பலன் கிட்டும்.

மாசி மாத சிவராத்திரியில் பூஜையை மனைவி செய்தால், கணவருடன் ஒற்றுமை உண்டாகும். கணவன் செய்தால் பிரிந்த மனைவியுடன் மீண்டும் சேருவார்.

பங்குனி மாத சிவராத்திரியில் பூஜை செய்தால் சிவபெருமானின் நடனத்தை காணும் பாக்கியம் கிடைக்கும்.

பிறந்த நட்சத்திரமும் சிவராத்திரியும் சேர்ந்து வரும் நாளில் அல்லது பிறந்த கிழமையும் சிவராத்திரியும் இணைந்து வரும் நாளில் சிவராத்திரி பூஜை மற்றும் விரதம் இருந்தாலே போதும் கலியுகத்தில் மானிடப் பிறவி எடுத்தமைக்கான லட்சியத்தை அடைந்து விட்டதாக அர்த்தம்.- Source: timestamil


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply