நவக்கிரக சன்னதி, பெருமாள் கோவில்களில் அமைக்க படாதது ஏன்? தெரிந்துகொள்வோமா?

0

️ வைணவர்களைப் பொறுத்தவரையில் பெருமாள்தான் எல்லாம். அதுமட்டுமல்லாமல் திருமால் வாமன அவதாரத்தில் மூன்று அடிகளில் உலகை அளந்தவர்.

அதனால் அவரது திருவடிகுள்ளேயே அனைத்து கிரகங்களும் உலகங்களும் அடக்கம். பெருமாளை கும்பிட்டால் நவகிரகங்களையும் சேர்த்து கும்பிட்ட பலன் கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.

️ அக்காலத்தில் பல பெருமாள் கோவில்களில் தாயார் சன்னதி அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

️ நவ திருப்பதிகள்:

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதிகள் நவகிரக ஸ்தலங்கள் ஆகக் கருதப்படுகின்றன.
️ திருத்தலங்களிலும் நவகிரக வழிபாடு இல்லை. பெருமாளை தரிசித்தால் நவக்கிரக தோஷத்திலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது. இப்படியாக அனைத்தும் ஆகி நிற்பவன் இறைவன் நாராயணன்.

️ இறைவன் கூற்று: மேற்கண்ட கருத்துக்கள் மக்கள் நம்பிக்கை மட்டுமல்ல. இறைவனின் கூற்று என்றும் கூற முடியும். அதற்கு சில ஆதாரங்கள் உள்ளன. இறைவனை தமது திருவாயால் கூறி அருளிய இறைவேதம் பகவத் கீதையில் தானே எல்லாமாக இருப்பதாக இறைவனை கூறியதாக பதிவாகியுள்ளது.

️ தர்மங்களை எல்லாம் என்னிடம் ஒப்படைத்து என்னை சரண் அடைந்தால் நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன் என்பது பகவத் கீதையின் ஒரு பொருளாகும். எனவே அகம் நிறைந்த பக்தியோடு பெருமாளை வழிபாடு செய்தால் அனைத்து விதமான தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பதில் மாற்றமில்லை.- Source: kalakkal


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply