பஞ்சமியில் வராஹி வழிபாட்டின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்வோமா?

0

* வராகி தேவி என்பவள் ஆதி பரமேஸ்வரி அல்லது ஆதிபராசக்தி சக்தி ஸ்வரூபம். மகிஷனை அழித்த மகிஷாசுரமர்த்தினியின் குதிரைப்படை தலைவி எனவும் கூட சிலர் இவளை குறிப்பிடுவதுண்டு.

* மனித உடலும் வராகி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே ஆதரவில் அன்னைக்கு நிகரானவள்.

* பஞ்சமி திதியில் இந்த தெய்வத்தின் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க கேட்ட வரங்களை மிக எளிதில் தரக்கூடியவள்.

* பஞ்சமி திதியில் வராஹி வழிபடும் முறை: நல்லெண்ணை தீபம் ஏற்றி வாசனை மலர்கள் சாற்றி ஐம்புலன்களும் ஆன்மீகத்தில் வராஹி தேவியின் காயத்ரி மந்திரத்தை ஜபித்து வரவேண்டும். பசும்பால் அல்லது இனிப்புகளை நிவேதனமாகப் படைக்கலாம். கண்டிப்பாக புளிப்பு இருக்கக்கூடாது.

* வாராஹி மந்திரம்:
‘ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹலஹஸ்தாய தீமஹி
தந்நோ வராஹி ப்ரசோதயாத்’

* கல்வி, தொழில் அல்லது உத்தியோகம் மேம்படும். எதிரிகள் பலம் குறையும்.

* கண் திருஷ்டி, செய்வினை அகலும். பயம் விலகும்.

* பஞ்சமி திதி, அமாவாசை திதியில் வராகி அம்மன் மூல மந்திரத்தை ஜெபித்து பலன் பெறலாம்.- Source: kalakkalcinema


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply