தேங்காய் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்..தேங்காய் தீபம் ஏற்றலாமா? தெரிந்து கொள்வோமா?

0

⚛ தேங்காய் விளக்கு அல்லது தேங்காய் தீபம் இவைகளைப்பற்றி சாஸ்திரங்களில் எங்குமே பதிவாகவில்லை. எனினும் அண்மைக் காலங்களில் பிரச்சினைகளுக்கு இடையில் பக்தி மேலீட்டால் சிலர் தேங்காய் விளக்கு ஏற்ற துவங்கிவிட்டனர். இது முற்றிலும் தவறான ஒன்றாகும்.

⚛ தேங்காயை உடைத்து அர்ப்பணிக்கலாம். பிள்ளையாருக்கு ஒரு படி மேலே போய் சூரத்தேங்காய் உடைக்கலாம். ஆனால் தேங்காயில் விளக்கு ஏற்றுவது அனைத்து கடவுள்களுக்கும் நிச்சயம் ஏற்றது அல்ல.

⚛ தேங்காயை இறைவனுக்கு படைத்து அதை மற்றவருக்கு தானமாக அளிப்பது பன்மடங்காக நன்மையே அளிக்கும். அவற்றைப் பகிர்ந்து பலரும் பிரசாதமாக வழங்கலாம். இதனால் இறை அருள் பூரணமாக கிடைக்கும்.

⚛ கூடாத செயல்:

சில கிராமங்களில் இறந்தவரது இல்லத்தில் தேங்காய் விளக்கை பயன்படுத்துவர். அம்மனை அல்லது குறிப்பாக பெண் தெய்வங்களை நெய் தீபமேற்றி வழிபட தேங்காய் விளக்கை பயன்படுத்துபவர்களும் உண்டு. இவையெல்லாம் நம்பிக்கையில் விளைந்தவை. இதனை நாம் புறக்கணிக்கலாம்.- Source: kalakkalcinema


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply