எதிரிகள் பயம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும் விநாயகர் வழிபாடுகள்..!

0

ஒரு தடவை விநாயகருக்கும் கஜாசுரனுக்கும் கடும் போர் ஏற்பட்டது. கஜாசுரனின் ராஜதானியாகிய மதங்க புரத்தை விநாயகர் முற்றுகையிட்டார். அசுரன் விட்ட பாணங்களை எல்லாம் தன் கரத்தில் இருந்த உலக்கையால் விலக்கி, அதனைக் கொண்டே அசுரனின் மார்பில் விநாயகர் அடித்தார்.

அவன் மயங்கி வீழ்ந்தானே அன்றி, இறக்கவில்லை. அவன் இறவாத வரம் பெற்றவன் என்பதை அறிந்த விநாயகர், தம் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவன் மீது ஏவினார். அவன் தன் உடலை விட்டு பெருச்சாளியாக ஓடி வந்தான். அதை விநாயகர் தமது வாகனமாகக் கொண்டு அடக்கி ஆண்டார்.

இவ்வாறு கஜமுகனை அடக்கி, அனைவரையும் காத்து, சுகம் பெற வைத்ததால், திருஇரும்பூளை தலத்தின் பிள்ளையாருக்கு கலங்காமல் காத்த விநாயகர் என்று பெயர். அசுரன் அடங்கிய பிறகு, அதுவரை அவனுக்கு செய்து வந்த தோப்புகரணம், தலையில் குட்டிக் கொள்ளுதல், தேங்காய் உடைத்தல் ஆகியவற்றை பிள்ளையாருக்கு செய்து வழிபட ஆரம்பித்தனர். திருஇளம்பூளை விநாயகரைத் தொடர்ந்து பல வாரங்கள் தொழுது வழிபட்டால் சத்ரு பயம் நீங்கும். வம்பு, வழக்குகள் அகன்று மனநிம்மதி கிடைக்கும் என்கிறார்கள்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply