
மகாவிஷ்ணுவின் இரண்டு திருவடிகளையும் கருடன் தன் கைகளால் தாங்கியபடி வரும் காட்சியே கருடசேவை.
மகாவிஷ்ணு, கருடன் அருள் ஒரே நேரத்தில் கிடைப்பது சிறப்பு. திருமாலும் கருடனும் ஒருவரே என்று மகாபாரதத்தில் உள்ள அனுசாசன பர்வம் கூறுகிறது.
கருடனின் மனைவிகள் ருத்ரா சுகீர்த்தி.
ஏகாதசி திருவோண நாட்களில் கருடனை வழிபட்டால் நோய் தீரும்.
க்ருத்மான், சாபர்ணன், விஜயன், சோமகாரீ என்று கருடனுக்கு பல பெயர்கள்உண்டு.
வைணவ ஆழ்வார்களால் நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடி இருக்கிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடியில் உள்ள மூலைக் கருடன் சிறப்பு மிக்கவர். இவருக்கு சிதறுகாய் உடைத்தால் தீமை அகலும் தடை நீங்கும்.
மகாபாரதப் போரில் கடைசி நாளில் கருட வியூகம் அமைத்து போர் நடந்தது இதில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது.
வைகுண்டத்திலிருந்து கருடனால் கொண்டுவரப்பட்ட வைரமுடி, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மேல் கோட்டை திருநாராயணபுரம் கோவிலில் உள்ளது. பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை இங்கு நடக்கிறது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் ரெங்கமன்னார் ஆண்டாள் கருடனுடன் ஒரே ஆசனத்தில் காட்சி தருகின்றனர். இங்கு பெருமாளுக்கு மாமனார் ஸ்தானத்தில் கருடன் இருக்கிறார்.

திருக்கண்ணங்குடி என்ற திவ்யதேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் காட்டிக்கொண்டு தரிசனம் தருகிறார். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சியாகும்.
கும்பகோணம் அருகிலுள்ள திருவெள்ளியங்குடியில் கருடாழ்வார் கைகளில் சங்கு சக்கரம் தாங்கிய நிலையில் இருக்கிறார்.
கருடனில் இருந்து கிடைக்கப்பெறும் தெய்வீக ஒளிக்கதிர் வீச்சானது மனிதர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒருவித நேர்மறை சக்திகளை உண்டாக்குகிறது என்று அறிவியல் ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.
நேபாள நாட்டில் கருட நாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கி விடும்.
பிரான்ஸ் சக்ரவர்த்தி மாவீரன் நெப்போலியனுடைய கொடி கருடக் கொடியாகும். எனவேதான் அவரால் பலவெற்றிகளை அடைய முடிந்தது.
வானத்தில் கருடனைப் பார்க்கும் போது கைகூப்பி வணங்கக் கூடாது. கன்னத்தில் போட்டுக் கொள்ளவும் கூடாது. மங்களானி பவந்து என மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும்.
கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும்.
பெருமாள் திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்த பின்பு நமது தலையில் சுவாமியின் திருவடி பதித்த சடாரி வைப்பார்கள். சடாரி வைத்த பின்பு, கருடனுக்கு பின்பு உள்ள கொடிமரத்தின் கீழே விழுந்து சுவாமிக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது.- Source: -timestamil
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
