வரலட்சுமி விரதம் 2019 கொண்டாடப்படும் நாள் மற்றும் பூஜை செய்யும் நேரம் இதோ!

0

இந்தியாவில் பல்வேறு கோயில்கள் இருப்பதோடு, பல்வேறு முக்கிய திருவிழா, பூஜை மற்றும் விரத முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வரலட்சுமி விரதம் மிகவும் முக்கியத்துவமனாக நாளாக கருதப்படுகின்றது. இந்த விரதத்தை கடைப்பிடிப்பது தன் மண வாழ்க்கைக்கு மிக முக்கியத்துவமனானதாகவும், தன்னுடைய கணவரின் ஆயுள் மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளும் விதமாக இந்த விரத தினத்தை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

வரலட்சுமி விரத நாள்:
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமி தினத்திற்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான இந்து சமயத்தை பின்பற்றும் சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள விரும்புவர்.

அப்படிப்பட்ட மிக முக்கிய விரத நாளா வரலட்சுமி விரதம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) கடைப்பிடிக்கப்பட்ட உள்ளது.

வரலட்சுமி பூஜை செய்வதற்கான நல்ல நேரம்:
வெள்ளிக் கிழமையில் பொதுவாக காலை 9.15 – 10.15 வரையிலும், மாலை 4.45 முதல் 5.45 வரை நல்ல நேரமாக உள்ளது.

இந்த நேரத்தில் வரலட்சுமி பூஜை செய்ய சிறந்த நேரம். அப்படி இல்லை என்றால், பொதுவாக வீட்டில் விளக்கேற்றும் அந்தி சாயும் நேரத்தில் பூஜை செய்வது நல்லது.- Source: samayam


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply