கோவிலில் பிறரால் ஏற்றப்பட்ட தீபம் அணைந்து விட்டால், நாம் அந்த தீபத்தினை ஏற்றலாமா?. தெரிந்து கொள்வோம்

0

* தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.

* கோவிலில் நாம் தீபம் ஏற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். தீபமேற்றுவதனால் நமக்கு வரும் துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

* நாம் புதிய தீபம் ஏற்றுவதைவிட உயர்ந்தது பிறர் ஏற்றி அணைந்த தீபத்தை மீண்டும் ஏற்றுவது.

* சுவாமி, சந்நிதியில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுடர் அணையும் தருவாயில் இருந்த அந்த விளக்கில் எண்ணெய் குடிப்பதற்காகச் சென்ற எலி ஒன்று, தான் அறியாமலேயே அந்தச் சுடரை நகர்த்தி விட்டு ஓடியது. அந்த நகர்த்திவிட்ட சுடர் தீபம் பளிச்சென்று மின்னியது.

* அறியாமல் செய்தாலும் கூட இச்செயல் மிகப் பெரிய புண்ணியமாக எலிக்குக் கிடைத்து, மறு பிறவியில் மிகப் பெரிய அரச குடும்பத்தில் பிறக்கும் பாக்கியம் பெற்றது.

* எனவே சந்நிதியில், அணைந்துள்ள தீபங்களை எந்த குழப்பமும் இல்லாமல் ஏற்றலாம்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply