நினைத்த காரியத்தை நிறைவேற்றும் சாய் நாதர் விரதம்

0

நினைத்த காரியம் நிறைவேற, ஒன்பது வியாழக்கிழமை சீரடி சாயிபாபாவை நினைத்து விரதம் இருந்தால், வேண்டியதைப் பெறலாம். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையில் வேண்டுமானாலும் பாபாவின் நாமத்தைச் சொல்லி தொடங்கலாம். எந்த காரியத்திற்காக விரதம் இருக்கிறோமோ, அதை மனதில் நினைத்து சாயிபாபாவை பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

பலகையில் மஞ்சள் துணியை விரித்து, அதன் மீது சாயிபாபா படத்தை வைத்து, சந்தனம், குங்குமம் திலகம் இட வேண்டும். படத்திற்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவிக்கலாம். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு போன்ற எதுவானாலும் நைவேத்தியமாக வைத்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி காலையும், மாலையும் சாயிபாபாவை வழிபட வேண்டும். இந்த விரதத்தை கடைப் பிடிக்கும்போது, பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள் மட்டுமே உட்கொள்ள வேண்டும். நாள் முழுவதும் இதுபோல் செய்ய முடியாதவர்கள், ஒரு வேளை மட்டும் உணவு அருந்தலாம். அதே வேளையில் நாள் முழுவதும் பட்டினியாக இருந்தும் இந்த விரதத்தை மேற்கொள்ளக் கூடாது.

வீட்டிலேயே சாய்பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்து வரவேண்டும். கோவிலுக்கும் சென்று வரலாம். விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாதவிலக்கு அல்லது இன்ன பிற காரணங்களால் விரதம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இன்னொரு வியாழக் கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம். ஒன்பதாவது வியாழக்கிழமையில் 5 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கலாம். மேற்கண்ட விதிமுறைகளின்படி விரதம் இருந்து நிறைவு செய்தால், நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply