
? சுவாமி படத்திற்கு சாற்றிய பூக்கள் மிகவும் மரியாதைக்குரியதாகும். புனிதமாக கருதப்படுகிறது.
? பொதுவாக அந்த காலங்களில் சுவாமி படத்திற்கு சாற்றிய மாலையை கடல், குளம், ஆறு, கிணறு, ஏரி என இவற்றில் ஓரிடத்தில் போடுவது மரபு.
? ஆனால் தற்காலங்களில் இது நீர் நிலைகளை அசுத்தம் செய்யும் விதமாக கருதப்படுவதால், மனிதர் கால் படாத இடங்களில் போடலாம் அல்லது பூமியில் புதைப்பதில் தவறில்லை.

? இது சுவாமிக்கு போட்ட மலர் மாலைக்கு நாம் தரும் மரியாதை ஆகும். சிலர் வாடிய மாலைகளை குப்பையில் போடுவர்.
? அவ்வாறு போடும் சமயத்தில் அது குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு மற்றும் கழிவு குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது அது பூஜை செய்தவர்களுக்கு நிச்சயம் நன்மை தராது. இதனை மனதில் கொள்ளுதல் நலம்.
? விவசாய நிலங்களில் போடுவதில் தவறில்லை.- Source: kalakkal
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
